புத்தம்புதிய வசதிகளுடன் FireFox 4 Beta 7


      அனைத்து பிரவுசர்களும் போட்டி காரணமாக பிரவுசரின் வேகம், திறன் மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தி புதிய பிரவுசர் பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் கூகுள் விரைவாக  புதுப்புது வசதிகளுடன் குரோமை வெளியி்ட்டு வருவதால் குரோமை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றது. மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  மூன்று நாட்களில் 20 இலட்சத்திற்கு மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

           இதில் பயர்பாக்ஸ் 4 வெர்சனை வெளியிடும் விதமாக, கடந்த ஜீலை மாதம் முதல் பயர்பாக்ஸ் 4 பீட்டா வெர்சன்களை வெளியிட்டு வருகிறது. இதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக பயர்பாக்ஸ் 4 வெர்சன் வெளியீடு பிப்ரவரி மாதத்திற்கு பிறகே வெளியிடப்படும் எனத்தெரிகிறது. இதில் அனைத்து வசதிகளையும் இணைத்து தர பயர்பாக்ஸ் முயன்று வருகிறது. இப்பொழுது மோஸி்ல்லா புதிதாக முந்தைய பயர்பாக்ஸ் பீட்டா வெர்சன்களில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்தும், பிரவுசரை அதிகமாக மேம்படுத்தியும் ”பயர்பாக்ஸ் 4 பீட்டா 7” வெளியிட்டுள்ளது. பலவிதமான சோதனைகளில் இதன் வேகம் நிருபிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
         இதன் பழைய வெர்சனாகிய பயர்பாக்ஸ் 3.6.12 விட 3.5 மடங்கும், பயர்பாக்ஸ் 4 பீட்டா 4 விட 2.75 மடங்கு அதிக வேகத்தில் பயர்பாக்ஸ் 4 பீட்டா 7 பிரவுசர் இயங்கும். அதிக தரம் கொண்ட வீடியோக்களை புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள WebM பார்மட்டையுடம், HTML5 வீடியோ வசதியையும் பயர்பாக்ஸ் கையாளும். புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜின் காரணமாக பயர்பாக்ஸில் அதிக வேகத்துடன் படங்கள் மற்றும் இணையப்பக்கங்கள் திறக்கப்படும். பயர்பாக்ஸில் உள்ள webGL மூலமாக இணையபக்கங்களில் புதிதாக 3டி -ஐ கொண்டுவர முயன்றுள்ளது. இதன் மூலமாக வருங்காலத்தில் 3டி விளையாட்டுகள், 3டி கிராபிக்ஸ் போன்ற முற்றிலும் புதிதான அனுபவம் பெறலாம்.

            இணையப் பாதுகாப்பை அதிகப்படுத்தி,  பயர்பாக்ஸ் முடங்கி போவதை தடுக்கவும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படியே அதன் ப்ளக்-இன்களான அடோப் ப்ளாஷ், ஆப்பிள் குயிக்டைம் முடங்கி போனாலும் பயர்பாக்ஸ் இயக்கமின்றி நிற்காமல் ரீலோட் கொடுத்தவுடன் மீண்டும் ப்ளக்-இன்கள் சரியாக இயங்கும். மேலும் புதிதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக இணையப்பக்கங்களை அழகாகவும், அதிக வசதிகளுடன் வடிவமைக்கலாம். பயர்பாக்ஸ் தொடங்கும் போது ஏற்பட்ட வேகக்குறைவும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. ரீலோட் பட்டன் அட்ரஸ் பாரின் அருகிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் சில அருமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் வேகம் மற்றும் செயல் திறனில் இதற்கு முந்தைய வெர்சன்களை விட இதில் வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.





3 comments:

  1. நானும் ரெண்டு நாளா ரீலோட் பட்டனைத் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. Submit your blog/site here www.ellameytamil.com

    ReplyDelete
  3. visit www.ellameytamil.com and www.webindiatoday.com to get more info about the computer,news,images,softwares,movies,actress,actors,cinema

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...