தமிழ்நாட்டின் டாப் 10 செய்தித்தாள்கள்

தமிழ்நாட்டின் செய்தித்தாள்களின் விற்பனை இன்டர்நெட், மொபைல் நியூஸ், டிவிகளின் ஆதிக்கம் போன்றவற்றால் சரிந்து கொண்டே வருகிறது. இதில் தினத்தந்தி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு செய்தித்தாள்களுக்கு மட்டுமே வாசகர்கள் அதிகரித்துள்ளனர்.

    இரண்டாம் காலாண்டில் தினத்தந்தி 68,000 வாசகர்கள் கூடுதலாக பெற்று முதலிடத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு 1000 வாசகர்கள் கூடுதலாக பெற்று எட்டாம் இடத்திலும் உள்ளன. தினத்தந்திக்கு வாசகர்கள் அதிகளவில் உள்ளதற்கு காரணம் டீக்கடைகள், சலூன்கள் போன்ற இடங்களில் அதிகம் படிக்கப்படுவது தான். மற்ற அனைத்து செய்தித்தாள்களும் சரிவை சந்திந்துள்ளன.

         தினகரன் இலவச இணைப்பு என்ற பெயரில் வாரத்தின் சில நாட்களுக்கு மூன்று ரூபாய்க்கு (இரண்டு ரூபாய் பெறாத) விலைக்கூட்டிய  செய்திதாளால்  இரண்டாம் காலண்டில் 1,50,000 வாசகர்களையும், விலை அதிகமான தினமலர் செய்தித்தாள் 1,24,000 வாசகர்களையும் இழந்துள்ளனர். இந்து நாளேடு 23,000 வாசகர்களையும், மாலைமலர் 50,000 வாசகர்களையும், தினமணி 24,000 வாசகர்களையும் இழந்துள்ளனர்.

    செய்தித்தாள் விற்பனையில் முதலிடத்திலுள்ள தினகரன் குறைந்த விலைக்கு செய்தித்தாளை விற்று, அதை விளம்பரதாரரி்டம் அதிக கட்டணம் வாங்கி சரிசெய்கிறது. தினமலர் இலவச இணைப்பை புத்தகமாக போட்டால் வரி கட்டவேண்டுமென்பதால், கம்ப்யூட்டர் மலரை செய்தித்தாளுடன் வெளியிடுகிறது. 

இந்திய அளவில் டைனிக் ஜக்ரண் ஹிந்தி செய்தித்தாள் வாசகர்கள் எண்ணிக்கையில் முதலிடத்திலும், டைனிக் பாஸ்கர் இரண்டாம் இடத்திலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூன்றாம் இடத்திலும், அமர் உஜாலா நான்காவது இடத்திலும், லோக்மாத் ஐந்தாம் இடத்திலும், தினத்தந்தி ஆறாம் இடத்திலும் உள்ளன.


புத்தகங்களில் குமுதம் முதலிடத்திலும், ஆனந்தவிகடன், குங்குமம், அவள் விகடன் முறையே இரண்டு, மூன்று, நான்காம் இடங்களில் உள்ளன. ஆனால் அவள்விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல் தவிர அனைத்தும் வாசகர் எண்ணிக்கையில் சரிவை சந்திந்துள்ளன.


                            வாசகர்களின் எண்ணிக்கை
செய்தித்தாள் Jan-Mar Apr-June வித்தியாசம்
தினத்தந்தி 7195000 7263000 68000
தினகரன் 5141000 4991000 -150000
தினமலர் 2983000 2859000 -124000
தி ஹிந்து 1154000 1131000 -23000
மாலைமலர் 606000 556000 -50000
தினமணி 536000 512000 -24000
டெக்கான் க்ரானிக்கல் 270000 250000 -20000
டைம்ஸ் ஆப் இந்தியா 220000 221000 1000
தமிழ்முரசு 164000 140000 -24000
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 112000 108000 -4000
                             வாசகர்களின் எண்ணிக்கை
புத்தகம் Jan-Mar Apr-June வித்தியாசம்
குமுதம் 1292000 1267000 -25000
ஆனந்தவிகடன் 1053000 1032000 -21000
குங்குமம் 948000 903000 -45000
அவள்விகடன் 552000 556000 4000
மங்கையர்மலர் 396000 362000 -34000
ஜுனியர்விகடன் 380000 345000 -35000
குமுதம் பக்தி 176000 180000 4000
இந்தியா டுடே 210000 169000 -41000
ராணி 179000 164000 -15000
ரீடர்ஸ் டைஜெஸ்ட் 143000 133000 -10000


தமிழ் திரட்டிகளுக்கான ஓட்டுப்பட்டை

ஓட்டுப்பட்டையை நம் ப்ளாக்கில் அமைக்கவேண்டிய அவசியம் என்னவென்றால், நமது ப்ளாக்கில் ஓட்டுப்பட்டை இல்லையென்றால் நமது பதிவிற்கு ஓட்டுப்போட நினைப்பவர்கள், மீண்டும் திரட்டிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். இதனால் நமது ஓட்டுக்கள் தவற நேரிடும். இதனால் திரட்டிகளில் ஓட்டுகளில் அடிப்படையில் நமது இடுகை கீழே போய், நிறையபேர் பார்க்க முடியாது.


உங்கள் ப்ளாக்கில் இந்த ஓட்டுப்பட்டையை இணைக்க, Dashboard செல்லவும். அதில் Design டேப்பில் இருக்கும் Edit HTML செல்லவும். Edit Template -ல் இருக்கும் Expand Widget Templates -ல் கிளிக் செய்யவும். பின்பு அதற்கு கீழ் இருக்கும் HTML coding-ல் <data:post.body/> என்பதனை தேடவும்.  சுலபமாக தேட Ctrl+F அழுத்தி,  அதில் <data:post.body/> என்று தட்டச்சு செய்து தேடலாம்.


இந்த HTML பகுதியை Copy செய்து <data:post.body/> என்பதற்கு கீழ் Paste செய்யவும். பிறகு அதற்கு கீழுள்ள Save Template என்பதை அழுத்தி வெளியேறவும்.


<!-- Tamilulagam2010 Vote Buttons Toorbar Code Start -->
<script type='text/javascript'>submit_url="<data:post.url/>"</script><script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'/> <script type='text/javascript'>button="vert";submit_url ="<data:post.url/>" </script><script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
<script type='text/javascript'>submit_url ="<data:post.url/>"</script> <script src='http://www.ww2.aranijothish.com/evb/button.js' type='text/javascript'/></script> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script><script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/> <div style='float:left;margin:1px 0px 0px 1px;'><script src='http://www.ellameytamil.com/modules/buttons/buttons.js' type='text/javascript'/><br/> <a class='PliggButton PliggLarge' expr:href='data:post.url' expr:title='data:post.title'><br/></a> </div> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://www.etamil.net/evb/button.php' type='text/javascript'/> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://www.bogy.in/tools/button.php' type='text/javascript'/> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script>
<script src='http://www.thalaivan.com/blog/evb/button.php' type='text/javascript'/> <script type='text/javascript'>submit_url ="<data:post.url/>"</script> <script src='http://www.valaiyakam.com/evb/button.php' type='text/javascript'/> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://www.tamildaily.com/vote/button.php' type='text/javascript'/>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://www.ta.tamilers.com/evb/button.php' type='text/javascript'/> <script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <!-- Tamilulagam2010 Vote Buttons Toorbar Code End -->பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடவும்...விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7

    உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. அதிகளவில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள்:


1) விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி பழகியது
2) அடுத்துவந்த விண்டோஸ் விஸ்டாவின் தோல்வி
3) புதிய விண்டோஸ் 7-ன் கணிணி ஹார்ட்வேர் தேவை

விண்டோஸ் 7-க்கு மாற என்ன செய்யலாம்
       விண்டோஸ் 7க்கு மாற உள்ள முக்கிய தடையே, இதனை பயன்படுத்த நம்மிடம் உள்ள பழைய (ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட்)ஹார்ட்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7க்கு குறைந்தப்பட்ச கணிணியின் தேவையாக 1 கிகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 1 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆனால் 600 மேல் மெகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 512 எம்பி ராம் மெமரி, 8 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் இருந்தாலே அந்த சிஸ்டத்தில் விண்டோஸ் 7 நிறுவலாம்.

நமது கணிணியில் விண்டோஸ் 7 நிறுவ சரியான ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட் இருக்கிறதா என்று பார்ப்பதற்க்கு,
"Desktop"  செல்லவும் --> "My Computer"-ல் வலப்பக்கம் கிளிக் செய்யவும் --> "Properties" தேர்ந்தெடுக்கவும் -->  "General"  டேப்பில் கீழே தகவல்கள் இருக்கும்.    


 
256 எம்பி ராம் மெமரி மட்டுமே நமது சிஸ்டத்தில் இருந்தால், நமது மெமரியை 512 க்கு உயர்த்தி விண்டோஸ் 7 நிறுவிய பின், அதை 256 எம்பிக்கு குறைந்தாலும் விண்டோஸ் 7 நன்றாக இயங்கும். இல்லையென்றால், விண்டோஸ் 7 நிறுவ வேண்டிய ஹார்ட் டிஸ்கை 256 எம்பி ராம் மெமரி உள்ள கணிணியிலிருந்து 512 ராம் மெமரி உள்ள கணிணிக்கு மாற்றி, விண்டோஸ் 7 நிறுவிய பின் மீண்டும் பழைய கணிணிக்கே மாற்றலாம்.


        விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி போலவே பயன்படுத்த எளிதாகவே உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பியை விட மனம் இல்லையென்றால், விண்டோஸ் 7-ஐயும் விண்டோஸ் எக்ஸ்பியையும் டூயல்பூட் முறையில் பதியலாம். அதாவது ஏற்கனவே உள்ள விண்டோஸ் எக்ஸ்பி C டிரைவிலும், புதிதாக பதியும் விண்டோஸ் 7-ஐ D டிரைவிலும் பதிந்தால் இரண்டு ஆப்ரேடிங் சிஸ்டத்தையும் பயன்படுத்திக் விண்டோஸ் 7 பயன்படுத்த பழகி கொள்ளலாம். இதோடு விண்டோஸ் 7-ல் விண்டோஸ் எக்ஸ்பியில் பழகியவர்களுக்கு ”விண்டோஸ் எக்ஸ்பி மோட்” உள்ளது.

           கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவ 50 நிமிடங்களும், விண்டோஸ் 7 நிறுவ 15 நிமிடங்களும் ஆகின்றன. விண்டோஸ் 7 பயன்படுத்துவதால் விண்டோஸ் 7 அழகிய தோற்றம் மற்றும் அனிமேஷன் செயல்பாடு, கணிணி பாதுகாப்பு, புதிய ஹார்ட்வேர்களின் இணைப்பு போன்றவைகளை பெறலாம்.உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள்

உங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள் உங்கள் வலைதளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கீழ்கண்ட திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம். ஏனென்றால், நீங்கள் பதிவுகளை இணைக்கும் பிரபலமான திரட்டி கூட சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

தமிழ் திரட்டிகள்இந்த தமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க, thiratti.com -ஐ தவிர அனைத்திலும் முதல்முறை அக்கௌண்ட் ஆரம்பிக்க வேண்டும். இலவசம் தான்.புத்தம்புதிய வசதிகளுடன் FireFox 4 Beta 7


      அனைத்து பிரவுசர்களும் போட்டி காரணமாக பிரவுசரின் வேகம், திறன் மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தி புதிய பிரவுசர் பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் கூகுள் விரைவாக  புதுப்புது வசதிகளுடன் குரோமை வெளியி்ட்டு வருவதால் குரோமை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றது. மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  மூன்று நாட்களில் 20 இலட்சத்திற்கு மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

           இதில் பயர்பாக்ஸ் 4 வெர்சனை வெளியிடும் விதமாக, கடந்த ஜீலை மாதம் முதல் பயர்பாக்ஸ் 4 பீட்டா வெர்சன்களை வெளியிட்டு வருகிறது. இதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக பயர்பாக்ஸ் 4 வெர்சன் வெளியீடு பிப்ரவரி மாதத்திற்கு பிறகே வெளியிடப்படும் எனத்தெரிகிறது. இதில் அனைத்து வசதிகளையும் இணைத்து தர பயர்பாக்ஸ் முயன்று வருகிறது. இப்பொழுது மோஸி்ல்லா புதிதாக முந்தைய பயர்பாக்ஸ் பீட்டா வெர்சன்களில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்தும், பிரவுசரை அதிகமாக மேம்படுத்தியும் ”பயர்பாக்ஸ் 4 பீட்டா 7” வெளியிட்டுள்ளது. பலவிதமான சோதனைகளில் இதன் வேகம் நிருபிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
         இதன் பழைய வெர்சனாகிய பயர்பாக்ஸ் 3.6.12 விட 3.5 மடங்கும், பயர்பாக்ஸ் 4 பீட்டா 4 விட 2.75 மடங்கு அதிக வேகத்தில் பயர்பாக்ஸ் 4 பீட்டா 7 பிரவுசர் இயங்கும். அதிக தரம் கொண்ட வீடியோக்களை புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள WebM பார்மட்டையுடம், HTML5 வீடியோ வசதியையும் பயர்பாக்ஸ் கையாளும். புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜின் காரணமாக பயர்பாக்ஸில் அதிக வேகத்துடன் படங்கள் மற்றும் இணையப்பக்கங்கள் திறக்கப்படும். பயர்பாக்ஸில் உள்ள webGL மூலமாக இணையபக்கங்களில் புதிதாக 3டி -ஐ கொண்டுவர முயன்றுள்ளது. இதன் மூலமாக வருங்காலத்தில் 3டி விளையாட்டுகள், 3டி கிராபிக்ஸ் போன்ற முற்றிலும் புதிதான அனுபவம் பெறலாம்.

            இணையப் பாதுகாப்பை அதிகப்படுத்தி,  பயர்பாக்ஸ் முடங்கி போவதை தடுக்கவும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படியே அதன் ப்ளக்-இன்களான அடோப் ப்ளாஷ், ஆப்பிள் குயிக்டைம் முடங்கி போனாலும் பயர்பாக்ஸ் இயக்கமின்றி நிற்காமல் ரீலோட் கொடுத்தவுடன் மீண்டும் ப்ளக்-இன்கள் சரியாக இயங்கும். மேலும் புதிதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக இணையப்பக்கங்களை அழகாகவும், அதிக வசதிகளுடன் வடிவமைக்கலாம். பயர்பாக்ஸ் தொடங்கும் போது ஏற்பட்ட வேகக்குறைவும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. ரீலோட் பட்டன் அட்ரஸ் பாரின் அருகிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் சில அருமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் வேகம் மற்றும் செயல் திறனில் இதற்கு முந்தைய வெர்சன்களை விட இதில் வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்

நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்


சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
   கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான பசி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை. சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண் ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது, களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும் தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்) சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து கொள்ளுதல் போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி, டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.

3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது) அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா (சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம், பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2, அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25, தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும், மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா,  ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில், எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.


உங்கள் வலைதளத்தின் நீளமான முகவரியை சுருக்கலாம் (Short your URL)

பொதுவாக நமது வலைதளத்தின் முகவரி (உதாரணமாக tamilulagam2010.blogspot.com) சற்று பெரியதாக இருக்கிறது. இந்த பெரிய முகவரியை டைப் செய்வதை விட அதற்கு எளிதான ஒரு சிறிய வலைதள முகவரியை கொடுத்து அதை டைப் செய்து நமது வலைதளம் திறந்தால் நன்றாக இருக்கும். அதற்கு கூகுளில் எளிய வழி ஒன்று உள்ளது.


           இந்த முகவரிக்கு சென்று Paste your long URL here: என்ற இடத்தில் உங்கள் வலைதளத்தின் முகவரியை கொடுத்தால் அருகிலேயே சிறிய முகவரியாக மாற்றித்தரும். இனி அந்த முகவரியை கொடுத்தால் உங்கள் வலைதளம் திறக்கப்படும்.

           கூகுளை விட வலைதள முகவரியை சிறப்பாக சுருக்கும் வேறொரு தளமும் உள்ளது. கூகுளில் அதில் வரும் சுருக்க வலைதள முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த தளத்தில் நீங்கள் நினைக்கும் சுருக்க வலைதள முகவரியை தரலாம்.

அதன் முகவரி http://bit.ly/

           இந்த முகவரிக்கு சென்று முதலில் அதில் உறுப்பினர் (Sign Up) ஆகவேண்டும். Shorten your links and share from here என்ற இடத்தில் உங்கள் வலைத்தள முகவரியை கொடுத்து பின் அதற்கு கீழ் இருக்கும் Customize என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். 

           அதில் ”bit.ly/” என்ற முகவரிக்கு அருகில் நீங்கள் விரும்பிய பெயரை சேர்த்து, Shorten என்ற பட்டனை க்ளிக் செய்தால், உங்களுக்கு தேவையான  வலைதள முகவரி சுருக்கமான பெயரில் கிடைக்கும். அந்த பெயர் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் வேறு பெயர் கொடுத்து முயற்சிக்கவும்.

           இந்த சுருக்கப் பெயரை உங்கள் வலைதளத்தில் குறிப்பிட்டால், உங்கள் வலைதளத்திற்கு வருபவர்கள் எளிதாக டைப் செய்து வருவார்கள்.

           இன்னும் இதைபோல் வலைதள முகவரியை சுருக்குவதற்கு, பல வலைதளங்கள் உள்ளன. முயற்சித்து பார்க்கவும்.


இன்னும் சில...
புதிதாக வந்த விலை குறைந்த மொபைல் போன்கள்

     இன்னும் தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. தீபாவளிக்குஉடைகளுக்கு அடுத்ததாக அதிகம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஆகிறது. இதில் முக்கியம் வாய்ந்த வசதிகள் நிறைந்த விலைமலிவான மொபைல் போன்களை என்ன புதிதாக சந்தைக்கு வந்துள்ளது என்று பார்ப்போம். அதோடு தீபாவளிக்கு மொபைல் போன்வாங்குவதனால் நிறைய சலுகைகளையும் பெறலாம்.


மிகக்குறைந்த விலை கொண்ட போன்கள்  
          மொபைல் போனை தொடர்பு கொள்ள மட்டும் பயன்படுத்துவர்கள் மற்றும் வயதானவர்கள் நவீன வசதிகள் இல்லாத மிகக்குறைந்த விலை கொண்ட தொடக்க நிலை (Basic Phone) போன்களை வாங்கலாம். பெரும்பாலும் கருப்பு, வெள்ளை போன் மற்றும் இதில் 3G,கேமரா, GPRS, Mp3 பிளேயர், Bluetooth, மெமரி கார்டு என நவீன வசதிகள் ஒன்று கூட இருக்காது. நோக்கியா 1202C / விலை(தோராயமாக): ரூ.1,000/-
சிறப்பம்சங்கள்: நோக்கியாவிலேயே விலை குறைந்த மொபைலான இந்த போனில் பிளாஷ் லைட், உள் நினைவகம் 4 MB, 9 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி ஆகியவை உள்ளன.


சோனி எரிக்ஸன் J132 / விலை(தோராயமாக): ரூ.1,300/-

சிறப்பம்சங்கள்: சோனி எரிக்ஸனிலேயே விலை குறைந்த மொபைலான இந்த போனில் உள் நினைவகம் 4 MB, பிளாஷ் லைட், FM ரேடியோ ஆகியவை உள்ளன.


சாம்சங் E1100 / விலை(தோராயமாக): ரூ.1,200/-
சிறப்பம்சங்கள்: சாம்சங் போனிலேயே விலை குறைந்த கலர் போனான இதில் பிளாஷ் லைட், உள் நினைவகம் 1 MB ஆகியவை உள்ளன.


LG KP107b / விலை(தோராயமாக): ரூ.1,000/-

சிறப்பம்சங்கள்: LG-ல் விலை குறைந்த இந்த கலர் போனில் 4 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி, மொபைல் டிராக்கர், குரல் பதிவு, GPRS ஆகியவை உள்ளன.3G மொபைல் போன்கள்:

3G சேவைகள் தொடங்கப்பட்ட பின்பு 3G போன் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. எனவே 3G வசதி கொண்ட விலை குறைந்த மொபைல் போன்கள் கீழே...
நோக்கியா 2730 / விலை(தோராயமாக): ரூ.3,900/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம்.வீடியோ வசதி கொண்ட கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 2Gயில் 8 மணி நேரமும், 3Gயில் 3 1/2 மணி நேரமும் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும். இதனுடன் 1 GB மெமரி கார்டு கிடைக்கிறது.


சோனி எரிக்ஸன் / G502 விலை(தோராயமாக): ரூ.4,800/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 32 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், வீடியோ வசதி கொண்ட கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 3.6 Mbps, GPRS,குரல் பதிவு உள்ள இந்த போனில் 10 மணி நேரம் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.

சாம்சங் C5010 Squash விலை(தோராயமாக): ரூ.3,300/-

சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 3 மணி நேரம் தாக்கு பிடிக்கும்.சாம்சங் C5130 / விலை(தோராயமாக): ரூ.3,500/-

சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 3.6 Mbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 13 மணி நேரம் தாக்குபிடிக்கும்.
LG GU285 / விலை(தோராயமாக): ரூ.4,300/-
சிறப்பம்சங்கள்: சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 20 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், வீடியோ வசதி கொண்ட கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனில் 2Gயில் 8 1/2 மணி நேரமும், 3Gயில் 5 1/2 மணி நேரமும் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.

இரண்டு சிம் கார்டு மொபைல் போன்கள்:
 
நோக்கியா C1 / விலை(தோராயமாக): ரூ.1,600/-
சிறப்பம்சங்கள்: இது அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு சிம் தொடக்கநிலை கலர் போன் ஆகும். இதில் பிளாஷ் லைட்டும், FM ரேடியோ, பதின்மூன்று மணி நேரம் தாக்கு பிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது. இது நீலம், இளம்பச்சை, சிவப்பு, சாம்பல்நிறங்களில் கிடைக்கிறது.LG GX200 / விலை(தோராயமாக): ரூ3,400/-

சிறப்பம்சங்கள்: இந்த போனின் உள் நினைவகம் 80 MB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்திகொள்ளலாம். மேலும் இதில் கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 13 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


சாம்சங் E1225 / விலை(தோராயமாக): ரூ1,700/-

சிறப்பம்சங்கள்: இந்த தொடக்கநிலை போனின் உள் நினைவகம் 1 MB மற்றும் டார்ச் லைட், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 9 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
வீடியோகான் V1306 / விலை(தோராயமாக): ரூ1,700/-

சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் மொபைல் போனான இதை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் டார்ச் லைட், GPRS, வயர்லெஸ் FM ரேடியோ, Mp3 பிளேயர், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 3 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


மைக்ரோமேக்ஸ் X215 / விலை(தோராயமாக): ரூ1,100/-
சிறப்பம்சங்கள்: இருக்கும் போன்களில் மிகவும் குறைந்த விலையில் உள்ள இரண்டு சிம் மொபைல் போனான இதை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் ப்ளாஷ் லைட், VGA கேமரா, GPRS, குரல் பதிவு போன்றவசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.

டச் ஸ்கிரீன் மொபைல் போன்கள்:

நோக்கியா 5233 / விலை(தோராயமாக): ரூ6,200/-
சிறப்பம்சங்கள்: டச் ஸ்கிரீன் கொண்ட இந்த போனின் உள் நினைவகம் 70 MB மற்றும் மெமரி கார்டு மூலம் 16 GB வரை உயர்த்திகொள்ளலாம். இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, FM ரேடியோ, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 10 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


சோனி எரிக்ஸன் G700 / விலை(தோராயமாக): ரூ.10,400/-

சிறப்பம்சங்கள்: சிறப்பம்சங்கள்: 2.4" டச் ஸ்கிரீன் கொண்ட இந்த போனின் உள் நினைவகம் 160 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், கேமரா 3 MP, Mp3 பிளேயர், Bluetooth, FM ரேடியோ, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 12 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.சாம்சங் C3303 CHAMP / விலை(தோராயமாக): ரூ3,900/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 25 MB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் VGA கேமரா, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, EDGE, குரல்பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.Motorola A810 / விலை(தோராயமாக): ரூ3,900/-

சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 744 KB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


Fly E106 / விலை(தோராயமாக): ரூ4,100/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, EDGE, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


LG KP500 Cookie / விலை(தோராயமாக): ரூ.5,500/-

சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 48 MB கொண்ட இந்த டச் ஸ்கிரீன் போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்திகொள்ளலாம். மேலும் இதில் வீடியோ வசதி கொண்ட கேமரா 3 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, Edge, குரல் பதிவு உள்ள இந்த போனில் 3 1/2 மணி நேரம் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.
KARBONN K446 / விலை(தோராயமாக): ரூ2,700/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 244 KB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.


     Related Posts Plugin for WordPress, Blogger...