தமிழ்நாட்டின் செய்தித்தாள்களின் விற்பனை இன்டர்நெட், மொபைல் நியூஸ், டிவிகளின் ஆதிக்கம் போன்றவற்றால் சரிந்து கொண்டே வருகிறது. இதில் தினத்தந்தி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு செய்தித்தாள்களுக்கு மட்டுமே வாசகர்கள் அதிகரித்துள்ளனர்.
இரண்டாம் காலாண்டில் தினத்தந்தி 68,000 வாசகர்கள் கூடுதலாக பெற்று முதலிடத்திலும், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு 1000 வாசகர்கள் கூடுதலாக பெற்று எட்டாம் இடத்திலும் உள்ளன. தினத்தந்திக்கு வாசகர்கள் அதிகளவில் உள்ளதற்கு காரணம் டீக்கடைகள், சலூன்கள் போன்ற இடங்களில் அதிகம் படிக்கப்படுவது தான். மற்ற அனைத்து செய்தித்தாள்களும் சரிவை சந்திந்துள்ளன.
தினகரன் இலவச இணைப்பு என்ற பெயரில் வாரத்தின் சில நாட்களுக்கு மூன்று ரூபாய்க்கு (இரண்டு ரூபாய் பெறாத) விலைக்கூட்டிய செய்திதாளால் இரண்டாம் காலண்டில் 1,50,000 வாசகர்களையும், விலை அதிகமான தினமலர் செய்தித்தாள் 1,24,000 வாசகர்களையும் இழந்துள்ளனர். இந்து நாளேடு 23,000 வாசகர்களையும், மாலைமலர் 50,000 வாசகர்களையும், தினமணி 24,000 வாசகர்களையும் இழந்துள்ளனர்.
செய்தித்தாள் விற்பனையில் முதலிடத்திலுள்ள தினகரன் குறைந்த விலைக்கு செய்தித்தாளை விற்று, அதை விளம்பரதாரரி்டம் அதிக கட்டணம் வாங்கி சரிசெய்கிறது. தினமலர் இலவச இணைப்பை புத்தகமாக போட்டால் வரி கட்டவேண்டுமென்பதால், கம்ப்யூட்டர் மலரை செய்தித்தாளுடன் வெளியிடுகிறது.
இந்திய அளவில் டைனிக் ஜக்ரண் ஹிந்தி செய்தித்தாள் வாசகர்கள் எண்ணிக்கையில் முதலிடத்திலும், டைனிக் பாஸ்கர் இரண்டாம் இடத்திலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூன்றாம் இடத்திலும், அமர் உஜாலா நான்காவது இடத்திலும், லோக்மாத் ஐந்தாம் இடத்திலும், தினத்தந்தி ஆறாம் இடத்திலும் உள்ளன.
புத்தகங்களில் குமுதம் முதலிடத்திலும், ஆனந்தவிகடன், குங்குமம், அவள் விகடன் முறையே இரண்டு, மூன்று, நான்காம் இடங்களில் உள்ளன. ஆனால் அவள்விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல் தவிர அனைத்தும் வாசகர் எண்ணிக்கையில் சரிவை சந்திந்துள்ளன.
| வாசகர்களின் எண்ணிக்கை | |||
| செய்தித்தாள் | Jan-Mar | Apr-June | வித்தியாசம் |
| தினத்தந்தி | 7195000 | 7263000 | 68000 |
| தினகரன் | 5141000 | 4991000 | -150000 |
| தினமலர் | 2983000 | 2859000 | -124000 |
| தி ஹிந்து | 1154000 | 1131000 | -23000 |
| மாலைமலர் | 606000 | 556000 | -50000 |
| தினமணி | 536000 | 512000 | -24000 |
| டெக்கான் க்ரானிக்கல் | 270000 | 250000 | -20000 |
| டைம்ஸ் ஆப் இந்தியா | 220000 | 221000 | 1000 |
| தமிழ்முரசு | 164000 | 140000 | -24000 |
| நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | 112000 | 108000 | -4000 |
| வாசகர்களின் எண்ணிக்கை | |||
| புத்தகம் | Jan-Mar | Apr-June | வித்தியாசம் |
| குமுதம் | 1292000 | 1267000 | -25000 |
| ஆனந்தவிகடன் | 1053000 | 1032000 | -21000 |
| குங்குமம் | 948000 | 903000 | -45000 |
| அவள்விகடன் | 552000 | 556000 | 4000 |
| மங்கையர்மலர் | 396000 | 362000 | -34000 |
| ஜுனியர்விகடன் | 380000 | 345000 | -35000 |
| குமுதம் பக்தி | 176000 | 180000 | 4000 |
| இந்தியா டுடே | 210000 | 169000 | -41000 |
| ராணி | 179000 | 164000 | -15000 |
| ரீடர்ஸ் டைஜெஸ்ட் | 143000 | 133000 | -10000 |




ஆக மொத்தம் அத்தனையும் குப்பைகள்!
ReplyDeleteரீடர்ஸ் டைஜஸ்ட் தவிர.
எல்லாவற்றையும் படிக்காமல் ஏதானும் ஒருபத்ரிக்கை படிப்பது நல்லது.
ReplyDeleteதரவுகளுக்கு நன்றி சகோதரம்.... வித்தியாசமான தேடலும் பதிவும்...
ReplyDelete