விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7

    உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. அதிகளவில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்கள்:


1) விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி பழகியது
2) அடுத்துவந்த விண்டோஸ் விஸ்டாவின் தோல்வி
3) புதிய விண்டோஸ் 7-ன் கணிணி ஹார்ட்வேர் தேவை

விண்டோஸ் 7-க்கு மாற என்ன செய்யலாம்
       விண்டோஸ் 7க்கு மாற உள்ள முக்கிய தடையே, இதனை பயன்படுத்த நம்மிடம் உள்ள பழைய (ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட்)ஹார்ட்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7க்கு குறைந்தப்பட்ச கணிணியின் தேவையாக 1 கிகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 1 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆனால் 600 மேல் மெகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 512 எம்பி ராம் மெமரி, 8 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் இருந்தாலே அந்த சிஸ்டத்தில் விண்டோஸ் 7 நிறுவலாம்.

நமது கணிணியில் விண்டோஸ் 7 நிறுவ சரியான ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட் இருக்கிறதா என்று பார்ப்பதற்க்கு,
"Desktop"  செல்லவும் --> "My Computer"-ல் வலப்பக்கம் கிளிக் செய்யவும் --> "Properties" தேர்ந்தெடுக்கவும் -->  "General"  டேப்பில் கீழே தகவல்கள் இருக்கும்.    


 
256 எம்பி ராம் மெமரி மட்டுமே நமது சிஸ்டத்தில் இருந்தால், நமது மெமரியை 512 க்கு உயர்த்தி விண்டோஸ் 7 நிறுவிய பின், அதை 256 எம்பிக்கு குறைந்தாலும் விண்டோஸ் 7 நன்றாக இயங்கும். இல்லையென்றால், விண்டோஸ் 7 நிறுவ வேண்டிய ஹார்ட் டிஸ்கை 256 எம்பி ராம் மெமரி உள்ள கணிணியிலிருந்து 512 ராம் மெமரி உள்ள கணிணிக்கு மாற்றி, விண்டோஸ் 7 நிறுவிய பின் மீண்டும் பழைய கணிணிக்கே மாற்றலாம்.


        விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி போலவே பயன்படுத்த எளிதாகவே உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பியை விட மனம் இல்லையென்றால், விண்டோஸ் 7-ஐயும் விண்டோஸ் எக்ஸ்பியையும் டூயல்பூட் முறையில் பதியலாம். அதாவது ஏற்கனவே உள்ள விண்டோஸ் எக்ஸ்பி C டிரைவிலும், புதிதாக பதியும் விண்டோஸ் 7-ஐ D டிரைவிலும் பதிந்தால் இரண்டு ஆப்ரேடிங் சிஸ்டத்தையும் பயன்படுத்திக் விண்டோஸ் 7 பயன்படுத்த பழகி கொள்ளலாம். இதோடு விண்டோஸ் 7-ல் விண்டோஸ் எக்ஸ்பியில் பழகியவர்களுக்கு ”விண்டோஸ் எக்ஸ்பி மோட்” உள்ளது.

           கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவ 50 நிமிடங்களும், விண்டோஸ் 7 நிறுவ 15 நிமிடங்களும் ஆகின்றன. விண்டோஸ் 7 பயன்படுத்துவதால் விண்டோஸ் 7 அழகிய தோற்றம் மற்றும் அனிமேஷன் செயல்பாடு, கணிணி பாதுகாப்பு, புதிய ஹார்ட்வேர்களின் இணைப்பு போன்றவைகளை பெறலாம்.



2 comments:

  1. நானும் 7 தான் பாவித்தேன் ஆனால் அது சிறிது காலத்தில் genuine ற்கு மாறச் சொல்லி முரண்டு பிடித்தது இப்ப பழையபடி எக்ஸ்பி தான் (ஒறிஜினல் வாங்க பணம் இல்லையப்பா..)

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...