கூகுளில் புதிய வசதிகள்









கூகுள் தினந்தோறும் ஏதாவது ஒரு மாற்றத்தை இணைய உலகில் ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. அவற்றில் சில...

புதிய வடிவில் படங்கள் தேடல் (Image Search)

Google படங்கள் தேடுதலை புதிய முறையில் தர முயற்சி மேற்கொள்கிறது. அதாவது படங்கள் தேடுதலில் போது படங்களை வரிசைப்படுத்தி (Group) தருகிறது. அதன் பின்புலத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்தால் அதன் வடிவம் வட்டமாகி மொத்த வரிசைப்படுத்தப்பட்ட படங்களும் கண்பிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு படத்தை க்ளிக் செய்தால் அந்த படம் அனிமேஷனுடன் அழகாக பெரிதாகி வருகிறது. உதாரணமாக tajmahal என்று டைப் செய்தால் படங்கள் நான்கு பிரிவுகளாக உருவாகி, தனி தனி பிரிவுகளாக அனிமேஷனனுடன் வருகிறது.

முகவரி: http://image-swirl.googlelabs.com/


ஆங்கில உச்சரிப்பை தமிழில் படிக்கலாம்

ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு முழு இணையப்பக்கத்தையோ அதே உச்சரிப்புடன் முழுவதுமாக மற்றொரு மொழிக்கு மாற்றலாம். இதன் மூலம் நமது பெயரைக் கூட மற்ற மொழிகளில் எழுத கற்கலாம் அல்லது ஆங்கிலத்தில் உள்ள இணையப்பக்கத்தை தமிழில் மாற்றி சுலபமாக படிக்கலாம். உதாரணமாக இதில் ”tamil ulagam” என்ற டைப் செய்தால் ”தமிழ் உலகம்” என மாற்றித் தரும். இணைய முகவரியை (உதாரணமாக www.msn.com) கொடுத்து தமிழை தேர்தெடுத்தால் அதன் முழு பக்கத்தை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றித்தரும்.

முகவரி: http://scriptconv.googlelabs.com/

முற்காலத்தில் வந்த செய்திதாள்களை படிக்கலாம்

இந்த வசதி மூலம் பழைய செய்திதாள்களில் வந்த செய்திகளை குறிச்சொற்கள் மூலமாகவோ, தேதி வாரியாகவோ காணலாம். உதாரணமாக, independence என்று டைப் செய்து இந்திய சுதந்திர நாளான August 15, 1985 என்று Date: பட்டியில் டைப் செய்தால் அந்தநாளில் வந்த ஆங்கில செய்திதாள்களை வரிசையாக காணலாம்.


முகவரி: http://newstimeline.googlelabs.com/


YouTube-ன் வேகத்தை அதிகப்படுத்தலாம்

YouTube பொதுவாக இணைய வேகம் குறைந்த கணிணியில் மெதுவாக செயல்படும். இதன் வேகத்தை அதிகப்படுத்த இப்போது Google புது வசதியை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் வீடியோவின் தரத்தை (Quality) சிறிது குறைப்பதன் மூலம் வீடியோ வரும் வேகத்தை அதிகப்படுத்தலாம். இதனை செயல்படுத்த,

முகவரி: http://www.youtube.com/feather_beta சென்று Join the "Feather" Beta என்பதை க்ளிக் செய்து வீடியோக்களை தேட தொடங்கலாம்.

செவ்வாய் கோளை ஆராயலாம்

இந்த வசதி மூலம் செவ்வாய் கோளின் மேற்பரப்பை Google Map போல செவ்வாயில் உள்ள பெயரிடப்பட்ட மலைகள், குன்றுகள், அமெரிக்க ஆய்வுக் கருவிகள் இறங்கிய இடங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைவாய், முக்கிய இடங்கள் என அனைத்தையும் காணலாம். மேலும் அகச்சிவப்பு காட்சியிலும் செவ்வாயை பார்க்கலாம்.

முகவரி: http://www।google.com/mars/






பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)


கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது.

Windows XP-ல் ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்க

Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Create a restore point என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் ஏதாவது பெயர் கொடுத்து Create என்பதை அழுத்திவுடன் Restore Point ஒன்று உருவாகி ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்கப்பட்டு விடும்.


Windows XP-ல் மீண்டும் பேக்-அப்பை நிறுவ

மீண்டும் Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Restore my computer to an earlier time என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். பிறகு நீங்கள் பேக்-அப் எடுத்த தேதியில் நீங்கள் கொடுத்த பெயரில் க்ளிக் செய்து அடுத்ததில் Next-ஐ அழுத்தவும். கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகி பழைய பேக்-அப் மீண்டும் நிறுவி விடும்.இந்த Program ரிஜிஸ்ட்ரியை மட்டுமல்ல மோசமான நிலைமையில் இருந்து கூட கணிணியை மீட்கும்.

ரிஜிஸ்ட்ரியை திறக்க Start -> Run செல்லவும் அல்லது Ctrl+R -ஐ அழுத்தவும். அதில் regedit என்பதை டைப் செய்தால் ரிஜிஸ்ட்ரி விண்டோ திறக்கும். அதில் மாற்றங்கள் செய்யலாம்.

கணிணி வேகமாக ஷட் டவுண் ஆக

கணிணி பொதுவாக ஷட் டவுண் செய்யும் போது கணிணியில் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடும். இதில் சில வரிசையாக end task கேட்கும் அல்லது அப்ளிகேஷனை மெதுவாக மூடும். இதனால் கணிணி ஷட் டவுண் ஆக அதிக நேரம் பிடிக்கும். இதனை சரி செய்ய,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_CURRENT_USER -> Control Panel -> Desktop செல்லவும். அதில் வலப்பக்கம் AutoEndTasks என்பதை டபுள்கிளிக் செய்து அதில் இருக்கும் ”0” எண்ணிற்கு பதிலாக ”1” என்பதாக மாற்றவும். ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால் இனி கணிணி விரைவாக ஷட் டவுண் ஆகும்.

Window Xp Sp2 கணிணியை Window Xp Sp3 ஆக மாற்ற

சில அப்ளிகேஷன்கள் Window Xp Service pack 2 என்பதற்கும் பதிலாக Window Xp-ல் Service Pack 3 இருந்தால் தான் பதிய முடியும் (உதாரணமாக Visual Studio 2010 Ultimate) எனக் கூறும். இல்லையென்றாலும் சும்மா செய்து பார்க்கலாம். இதை ரிஜிஸ்ட்ரியில் செய்ய,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control\Windows செல்லவும். அதில் வலப்பக்கம் CSDVersion என்பதை டபுள்கிளிக் செய்து அதில் இருக்கும் ”200” எண்ணிற்கு பதிலாக ”300” என்பதாக மாற்றவும்.பிறகு

ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்து டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல் வலப்பக்கம் க்ளிக் செய்து Properties என்பதை அழுத்தினால், அதில் Service Pack 3 என்று வரும்.

கணிணியின் உரிமையாளரை மாற்ற

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கணிணியில் பழைய உரிமையாளர் அல்லது நீங்கள் கணிணி வாங்கிய நிறுவனத்தில் பெயரை கணிணியின் உரிமையாளர் என்பதில் இருந்து மாற்ற,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> WindowsNT -> CurrentVersion செல்லவும். அதில் வலப்பக்கம் RegisteredOwner என்பதிலும் RegisteredOrganization என்பதிலும் உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை மாற்றவும். பின் ரிஜிஸ்ட்ரியை மூடி டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல் வலப்பக்கம் க்ளிக் செய்து Properties என்பதை அழுத்தினால், அதில் Registered to: என்பதன் கீழ் நீங்கள் கொடுத்த பெயர் வரும்.

Shortcut கோப்புகளில் அம்புக்குறியை நீக்க

டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் வளைந்த அம்புக்குறி இருக்கும். இதனை ரிஜிஸ்ட்ரியில் எளிதாக நீக்கலாம்.

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_CLASSES_ROOT -> lnkfile செல்லவும். அதில் வலப்பக்கம் இருக்கும் IsShortcut மேல் வலப்பக்கம் க்ளிக் செய்து Delete செய்யவும். பிறகு ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால் டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் அம்புக்குறி இருக்காது.


மோடம் உள்ள மொபைல் போன்கள் (Phone as a Modem)


நோக்கியாவில் மோடம் உள்ள கைபேசி மாடல்கள்

Nokia 3230
Nokia 3250
Nokia 5320
Nokia 5320XpressMusic
Nokia 5500
Nokia 5500d
Nokia 5700
Nokia 6110
Nokia 6110Navigator
Nokia 6120
Nokia 6120c
Nokia 6121
Nokia 6124
Nokia 6124Classic
Nokia 6210
Nokia 6210Navigator
Nokia 6220
Nokia 6220Classic
Nokia 6260
Nokia 6290
Nokia 6600
Nokia 6620
Nokia 6630
Nokia 6650
Nokia 6650Classic
Nokia 6670
Nokia 6680
Nokia 6681
Nokia 6682
Nokia 7610
Nokia E50
Nokia E50-1
Nokia E51
Nokia E51-1
Nokia E60
Nokia E60-1
Nokia E61
Nokia E61-1
Nokia E61i
Nokia E61i-1
Nokia E62
Nokia E62-1
Nokia E65
Nokia E65-1
Nokia E66
Nokia E66-1
Nokia E70
Nokia E70-1
Nokia E71
Nokia E90
Nokia E90-1
Nokia N70
Nokia N70-1
Nokia N71
Nokia N71-1
Nokia N72
Nokia N72-1
Nokia N73
Nokia N73-1
Nokia N75
Nokia N75-1
Nokia N76
Nokia N76-1
Nokia N77
Nokia N77-1
Nokia N78
Nokia N80
Nokia N80-1
Nokia N80-2
Nokia N80-3
Nokia N81_8GB
Nokia N81-1
Nokia N81-2
Nokia N81-3
Nokia N81-8GB
Nokia N82
Nokia N82-1
Nokia N90
Nokia N90-1
Nokia N91
Nokia N91_8GB
Nokia N91-1
Nokia N91-2
Nokia N91-8GB
Nokia N92
Nokia N92-1
Nokia N93
Nokia N93-1
Nokia N93i
Nokia N93i-1
Nokia N95
Nokia N95_8GB
Nokia N95-1
Nokia N95-3
Nokia N96
etc.,

சோனி எரிக்ஸன் -ல் மோடம் உள்ள கைபேசி மாடல்கள்

Sony Ericsson k310i
Sony Ericsson k320i
Sony Ericsson k510i
Sony Ericsson k600i
Sony Ericsson k608i
Sony Ericsson k750i
Sony Ericsson k790
Sony Ericsson K790a
Sony Ericsson k790i
Sony Ericsson k810
Sony Ericsson k810i
Sony Ericsson v600i
Sony Ericsson w200i
Sony Ericsson w300i
Sony Ericsson w550i
Sony Ericsson w580i
Sony Ericsson w600i
Sony Ericsson w700i
Sony Ericsson w810i
Sony Ericsson w850i
Sony Ericsson w880i
Sony Ericsson w900i
Sony Ericsson z310i
Sony Ericsson z320i
Sony Ericsson z520i
Sony Ericsson z525i
Sony Ericsson z530i
Sony Ericsson z550i
Sony Ericsson z558i
Sony Ericsson z710i
etc.,

இவை தவிர பிளை (Fly Mobile) போன்ற இன்னும் சில கைபேசிகளிலும் Inbuilt Modem உள்ளது.




மாதம் 95 ரூபாயில் கைபேசியில் இருந்து இணைய இணைப்பு














பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.

மோடம் உள்ள போன்கள் விபரம் அறிய இதை சுட்டவும்.


தேவையானவை


1) மோடம் உள்ள போன் (உதாரணமாக Nokia N72)

2) போனையும் கணிணியையும் இணைக்கும் USB கேபிள்
(உதாரணமாக Ca-53) (USB கேபிள் உங்கள் போன் மாடலை சொல்லி நோக்கியா டீலர் அல்லது பஜார்களில் கேட்டால் கி்டைக்கும்)

3) நோக்கியா பிசி சூட் அல்லது போனையும் கணிணியையும் இணைக்கும் கேபிளுடன் கொடுக்கப்படும் Cd (Nokia PC Suite or Phone Connection Cd Setup)

நோக்கியா பிசி சூட் தரவிறக்க இங்கே சுட்டவும்

4) உங்கள் கைபேசியின் சேவை வழங்குநரிடம் (ஏர்டெல், டாடா டோகோமோ, ஏர்செல்) இருந்து GPRS இணைப்பு.

(டாடா டோகோமோவில் தான் வேகம் நன்றாக உள்ளது. 6 ஜிபி ரூ.95. அன்லிமிடெட் ரூ.98 என்று ஏர்செல் பயன்படுத்தினால் இணைய வேகம் டாடா டோகோமோவில் கிடைப்பதில் சராசரியாக ஆறில் ஒரு பங்கு தான் கிடைக்கும். ஏர்செல்லில் தினமும் 24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 2 ஜிபி கூட தாண்டாது. இப்போது BSNL-ல் 3G வருவதால் 3G மற்றும் மோடம் உள்ள போனாக வாங்கினால் இணைய வேகம் நன்றாக இருக்கும்)


செய்யவேண்யவை

கேபிளுடன் கொடுக்கப்படும் Cdயில் இருந்து உங்கள் கைபேசிக்கான சாப்ட்வேர் அல்லது நோக்கியா பிசி சூட்டை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். பிறகு கைபேசியில் GPRS இணைப்பு பெற வேண்டும். (GPRS-க்கான செட்டிங்ஸ் கைபேசியில் default ஆக வைக்கவும். பின் போனிலேயே இணையத்திற்கு சென்று பார்க்க நோக்கியா போனாக இருந்தால் ”0” வை அழுத்தி கொண்டிருந்தால் இணையம் திறக்கும். அதில் ஏதாவது ஒரு இணைய பக்கத்தை திறந்து பார்க்க முடிந்தால் கைபேசி இணைய இணைப்பிற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம்.) பின் கைபேசியையும் கணிணியையும் USB கேபிளால் இணைக்க வேண்டும்.

தானாகவே கணிணி கைபேசியை இணைக்கும் வரை காத்திருக்கவும். Start -> Control Panel -> System -> Hardware -> Device Manager-ல் சென்று பார்த்தால் அதில் Modems இருக்கும். அதில் டபுள்கிளிக் செய்தால் அதில் உங்கள் கைபேசியின் மாடல் (உதாரணமாக Nokia N72 USB Modem) இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பொருள்.



பிறகு Start -> Control Panel -> Network Connections சென்று பைல் மெனுவில் New Connection... என்பதை சுட்டினால் wizard ஒன்று வரும். அதில் Next கொடுத்து அடுத்து வருவதில் Connect to the Internet என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Set up my Connection Manually என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Connect using a dial-up modem என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். Isp Name என்பதில் ஏதாவது பெயர் (உதாரணமாக Dial Up) டைப் செய்து Next-ஐ அழுத்தவும். Phone Number என்பதில் Tata Docomo, Aircel என்றால் *99# என டைப் செய்து Next-ஐ அழுத்தி அடுத்து வருவதிலும் Next-ஐ அழுத்தவும். அடுத்துவரும் பக்கத்தில் "Add a shortcut to this connection to my desktop" என்பதில் டிக் போட்டு Finish என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான்.

Computer Desktop-ல் நீங்கள் பெயர் கொடுத்த ஐகான் இருக்கும். அதனை டபுள்க்ளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Dial என்பதை க்ளிக் செய்தால் சற்று நேரத்தில் இணையம் திறந்து அதற்கு அடயாளமாக டாஸ்க் பாரில் சிறு ஜகான் தோன்றும். கைபேசியிலும் சிறு ஜகான் (உலக உருண்டை அல்லது இருகோடுகள் போல)இடது மேற்பகுதியில் இருக்கும். உடனே பிரௌசரில் உங்களுக்கு தேவையான வலைப்பக்கத்திற்கு செல்லலாம். Internet Connection-ஐ நிறுத்த டாஸ்க் பாரில் இருக்கும் ஐகானில் வலதுபக்கம் க்ளிக் செய்து அதில் Disconnect என்பதை அழுத்தலாம்.

மேற்கண்ட அனைத்தும் செய்தும் கைபேசியில் இணையம் வந்து, கணிணியில் வரவில்லை என்றால் கைபேசியையும், கணிணியையும் Restart செய்து முயற்சிக்கவும்.

உங்கள் இணைய வேகம் அறிய இதை சுட்டவும்.
http://www.speedtest.net/


உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1
ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2
தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3
தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4
அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5
வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6
அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7
தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8
அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:



இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு

காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)

காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.

முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)

மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)

மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு

இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)

காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.

படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.


Related Posts Plugin for WordPress, Blogger...